Monday, September 14, 2009

போலிடோண்டு விவகாரம் - ஒரு தகவற்கோவை, பகுதி 2

·

சென்ற பதிவினை தொடர்ந்து இது இரண்டாம் பகுதி.

உரிமைத்துறப்பு:தனிமனிதரை ஆபாசமாக தாக்குகிற, தனிமனிதர்களின் சுற்றத்தை அல்லது சம்பத்தப்பட்ட வேறு எவரையுமோ தாக்குகிற பின்னூட்டங்கள் நிச்சயம் அனுமதிக்கப்படா. ஆபாசம் தவிர்த்து வேறு கருத்துக்களும் அப்பின்னூட்டங்களில் இருப்பின் அவை மட்டுறுத்தி வெளியிடப்படும் என்பதற்கு உத்திரவாதம் இல்லை. இப்பதிவரை தாக்கியோ பாராட்டியோ வரும் பின்னூட்டங்களுக்கு அனுமதி இல்லை.


மூர்த்தி தமிழ் வலைப்பூக்களின் மூத்த பதிவர்களில் ஒருவர். தமிழ் வலைப்பூக்கள் உருவான காலக்கட்டத்தில் இருந்த விரல் விட்டு எண்ணக்கூடிய பதிவர்களில் இவரும் ஒருவர். சிங்கப்பூர், மலேசியா நாடுகளில் தமிழ் இலக்கியம், இணையம் தொடர்பாக நடந்த கூட்டங்களுக்கு மூர்த்தி கட்டாயம் வருவார். ஒரு வலைப்பூ நடத்தி வந்தார். அவரது வலைப்பூவில் சர்ச்சைக்குரிய பதிவுகள் எதுவும் இல்லை. முத்தமிழ் மன்றம் என்ற கருத்து மன்றத்தை நிறுவிய நிறுவனர்களில் மூர்த்தியும் ஒருவர். தேன்கூடு திரட்டி நடத்தி வந்த சாகரன் வடிவமைத்து தந்த மன்றம் இது. ஆனால் பிற்பாடு அதே தேன்கூடு சாகரனையே போலி டோண்டு ஆபாசமாக அர்ச்சித்தது வேறுகதை.

வெங்கடேஷின் கமல் பதிவுக்கு அடுத்து அடுக்கடுக்காக மூர்த்தி மீது தாக்குதல்கள் நடைபெற்றது. ஒரு கட்டத்துக்கு மேல் கடுப்படைந்த மூர்த்தி போலி டோண்டுவாக உருமாற்றம் அடைந்திருக்கிறார். இது ஒரே இரவில் நடந்த விஷயமில்லை. ‘நான் இதுபோல மாறியதற்கு காரணம் என்மீது புகார் கொடுத்தவரே’ என்று பிற்பாடு போலிஸ் விசாரணையில் மூர்த்தி ஒப்புகொண்டதாக சொல்கிறார்கள்.

போலி டோண்டுவாக மூர்த்தி டோண்டுவை தாக்கு தாக்குவென்று தாக்க, டோண்டுவின் சாதிவெறி மீது வெறுப்பு இருந்தவர்களை உள்ளூற திருப்தி படுத்தியது. டோண்டுவும், அவரது பிராமண நண்பர்களும் மட்டுமே போலிக்கு எதிராக புனித யுத்தத்தில் ஈடுபட, சும்மா இருந்தவர்கள் அல்லக்கைகள் ஆக்கப்பட்டார்கள்.

போலி டோண்டு வடிவிலான ஆபாசதாக்குதல்கள் மட்டும் தனக்கு ஆதரவினை பெற்றுதராது என்பதை மூர்த்தி உணர்ந்தார். விடாது கருப்பு என்றொரு வலைப்பூவை உருவாக்கி பெரியார் கருத்துகளை பதிய ஆரம்பித்தார். ஆனாலும் இடை இடையே டோண்டுவையும், பிராமணர்களையும் தாக்கி சூடான பதிவுகள் இடம்பெறும். இப்போது அழிக்கப்பட்டுவிட்ட இந்த வலைப்பூ மட்டும் இருந்தால் பல திராவிட பதிவர்களின் நிலைமை கவலைக்கிடமாகி இருக்கக்கூடும். அன்று இந்த விடாது கருப்பு பதிவுக்கு ஆதரவாக செயல்பட்ட பல திராவிட பதிவர்கள் மற்றும் நண்பர்களை அல்லக்கை என்று குறைகூறி டோண்டுவுக்கு ஆதரவாக மாறிபோயிருக்கிறார்கள். இரு ஆபாசங்களில் ஒன்றை தேர்ந்தெடுத்ததற்கு சிலருக்கு தனிப்பட்ட காரணங்கள் இருந்தாலும் அதற்கு பதிலாக, புத்திசாலித்தனமாக அல்லது நியாயத்தை நம்பும் எண்ணம் கொண்ட பாலபாரதி, முத்து தமிழினி, இன்ன பிற பதிவர்களைபோல் இவர்களும் ஒதுங்கிப் போய் இருக்கலாம் என்ற கருத்து இப்போது பலரிடமும் இருக்கிறது.

போலி டோண்டு, விடாது கருப்பு ஆகிய பதிவுகளோடு சேர்த்து சுமார் இருபது ஆபாச வலைபூக்களை மூர்த்தி நடத்தியதாக தெரிகிறது. டோண்டு குழு போலிசில் அளித்த புகாரில் இருந்த எண்ணிக்கையை காட்டிலும் இது அதிகமானது. எல்லா வலைப்பூக்களையும் நடத்தியதாக போலிஸிடம் ஒப்புக்கொண்ட மூர்த்தி சாருநிவேதிதாவின் ஈமெயில் ஐடியை மட்டும் தான் ஹேக் செய்யவில்லை என்று விசாரணையில் கூறியிருக்கிறார். மூர்த்தி மீது பழிபோட இந்த வேலையை செய்திருக்கலாம் என்று ஒரு தகவல் கசிகிறது. (இது இப்பதிவரளவில் உறுதிப் படுத்தப்படாத தகவல்).

மூர்த்தி விடாது கருப்புவாக கோலோச்சி கொண்டிருந்த நேரத்தில் சிங்கப்பூர் பதிவர் சந்திப்புகளில் கலந்து கொண்டதுண்டு. பதிவர் குழலி, கோவிகண்ணன் உட்பட பலரும் கலந்து கொண்ட வழக்கமான பதிவர் சந்திப்புகள் அவை. பதிவுகளில் ஏற்பட்ட நட்பை தொடர்ந்து தி.க தலைவர் வீரமணியை குழலியுடன் சந்தித்து இருக்கிறார் மூர்த்தி. குழலியுடன் மூர்த்திக்கு ஏற்பட்ட பிரச்சினைக்குப் பிறகு அல்லது போலி குழலியை தாக்கத்தொடங்கிய பிறகு மூர்த்திதான் போலி என்று நிரூபிக்க முயற்சி செய்ததுடன் போலியை தம் ஆதரவாளர்களுடன் எதிர்கொண்டிருந்த டோண்டு வுக்கு ஆதரவு தர தொடங்கினார். காவல் துறையில் போலியை அடையாளப்படுத்த கோவிகண்ணனை கேட்டுக்கொண்டபோது அவர் மறுத்துவிட்டார். அப்போது மூர்த்திதான் போலி என்பது தமக்கு தெரியாது என்பது கோவிகண்ணனின் தற்போதைய வாதம். அதை உறுதிபடுத்துவது தனது வேலையல்ல என்கிறார். அவரது வாதம் மற்றும் உறுதிப் படுத்த மறுத்தது போன்றவையே அவர்மீதான குழலி மற்றும் செந்தழல் ரவி ஆகியோரது வெறுப்பிற்கு காரணம். இதற்கு ஆதாரங்களாக பலவற்றை ஏற்கனவே கூறியுள்ளனர். அதேசமயம் மூர்த்தியுடன் இவர்களது நட்பை விளக்குவதை விட தன்னை நிரூபிப்பதே தாம் விரும்புவதாக சில விளக்கங்களையும் கோவிகண்ணன் வெளியிட்டுள்ளார். எனினும் இதுபற்றிய ஓயாத சச்சரவுகள் எப்போதும் ஏற்பட்டுக்கொண்டே உள்ளன.

2006ல் வலைப்பதிய ஆரம்பித்த லக்கிலுக் மிக குறுகிய காலத்தில் பிரபலமடைந்தார். அப்போது குழலி, முத்து தமிழினி, முத்துகுமரன் ஆகிய மூவரும் திராவிட தமிழர்கள் என்றொரு கூட்டுவலைபூவை நடத்தி கொண்டிருந்தார்கள். இவர்களுக்கு ஒரு கூகிள் குழுமமும் இருந்தது. லக்கிலுக் அந்த குழுமத்தில் இருந்தார். லக்கிலுக்கின் அதிரடி செயல்பாடுகளை கண்ட திராவிட தமிழர்கள் அவரையும் தங்கள் குழுவின் பொறுப்பாளராக சேர்த்து கொண்டார்கள். இது ஆரிய பதிவர்கள் ஒன்றுகூடி ஆபாசமாக நடத்திவந்த விட்டது சிகப்பு என்ற பெயர்கொண்ட குழுவுக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தியது. செந்தழல் ரவியைப் போலவே லக்கிலுக்கும் மூர்த்தியுடன் நட்பில் இருந்தார். போலி ஆபாசங்களை அரங்கேற்றத் தொடங்கியபிறகு அல்லது தாங்களும் தாக்குதலுக்கு ஆளான பிறகு அந்நட்பை தொடர்ந்தார்களா என்பதே தற்போதைய பிரச்சினைக்குக் காரணம்.

டோண்டுவுடன் சேர்ந்து தாக்குதல்கள் நடத்திய பதிவர்களுடன் டோண்டுவுக்கு இருந்த தொடர்பில் எவ்வித மர்மமும் இல்லை. ஆனால் அவர்கள் யார் என்பதில் மர்மம் நீடித்தது. முகமூடி, விட்டது சிகப்பு, என்றென்றும் பாலா போன்ற தளங்களை நடத்தியவர்கள் யாரென்று உறுதிப்படுத்தக் கூறி யாரிடமும் யாரும் கோரவில்லை என்று தெரிகிறது. அவர்கள் மீது புகாரை டோண்டுவும் தரவில்லை. புதிதாக டோண்டுவுக்கு அவருக்கு ஆதரவு அளிக்கத் தொடங்கியவர்களும் அதை கோரவில்லை. காவல்துறைக்கு விஷயம் சென்றதும் அப்பதிவுகள் நின்றுவிட்டன. அவர்களின் செயல்பாடுகள் கூட்டாக இருந்தன. பிளவுகள் இல்லை. ஒருவர்மீது ஒருவருக்கு காழ்ப்போ தனிப்பட்ட மனக்கசப்போ இல்லை. ஆனால் மூர்த்தியோ தம் ஆதரவாளர்களை தன செயல்பாடுகளால் இழந்தார்.

அதே நேரத்தில் ஜயராமன் என்பவன் போலிடோண்டு பாணியில் ஒரு பெண் பதிவரை ஆபாசமாக எழுதி கையும் களவுமாக பிடிபட்டிருந்தான். இவனை தகுந்த ஆதாரங்களோடு பிடித்தவர் பாலபாரதி. ஜயராமனுக்கு அந்த பெண் பதிவர் பற்றிய தனிப்பட்ட தகவல்களை தந்து உதவியர்கள் டோண்டுவும், அவரது சீடர் என்றென்றும் பாலாவும் என்று அப்போது கிசுகிசுக்கப்பட்டது. இதற்கு சல்மா அயூப் ஆபரேஷன் என்று பாலபாரதி பெயர் இட்டிருந்தார். டோண்டுவின் அல்லக்கை என்று எதிரணியினரால் அழைக்கப்பட்ட அவன் ஆதாரங்களோடு மாட்டிகொண்டதில் பதட்டம் அடைந்தார் டோண்டு. போலி என்ன செய்தானோ அதையே டோண்டுவும் அவரது அல்லக்கைகளும் செய்துவந்தார்கள் என்பது அப்போது வெட்டவெளிச்சமானது. டோண்டு தன்னுடைய சக இந்துத்துவா நண்பர்களின் உதவியை நாடினார். ஜயராமனை அவர்கள் காப்பாற்ற பல கட்டுகதைகளை வெளியிட்டார்கள். அவற்றில் ஒன்றுதான் லக்கிலுக் அடியாள்களை வைத்து மிரட்டி ஜயராமனிடம் கையெழுத்து வாங்கியது. உண்மையில் லக்கிலுக்குக்கும் அந்த ஆபரேஷனுக்கு சம்பந்தம் எதுவுமில்லை. இதற்கான ஆதாரம் ரெகார்ட் ஆகியிருப்பதாக தெரிகிறது.

இதே காலக்கட்டத்தில் ராபின்ஹூட் என்று ஒரு பதிவர் மூர்த்தியின் மனைவி போட்டோவை வலைப்பூவில் ஏற்றி நிலைமையை மோசமாக்கினார். பதிலுக்கு போலி, டோண்டுவின் மகள் போட்டோவை வலையில் ஏற்றினார். டோண்டுவின் மெயில் ஐடியில் ஒரே ஒரு எழுத்தை கூடுதலாக சேர்த்து எல்லா பதிவர்களும் டோண்டு அனுப்புவது போல சாட் ரிக்வெஸ்ட் அனுப்பி வைத்தான் போலி. பல பதிவர்களும் ஒரிஜினல் டோண்டு என்று நினைத்து சாட் அழைப்பை ஏற்று கொண்டார்கள். அதுபோல தொடர்பில் இருந்த ஒரு பெண் பதிவரிடம் இருந்து இந்த போட்டோவை பெற்றானாம் போலி. போலியை போலி பாணியிலேயே தண்ணி காட்டிய ராபின்ஹூட் ஒரு பெங்களூர் பதிவர். அவரது இயற்பெயர் மகேஷ். தமிழில் அவருக்கு வேறு வலைப்பூ இருக்கிறதா போன்ற விவரங்கள் தெரியவில்லை.

0 comments: