Thursday, September 17, 2009

போலிடோண்டு விவகாரம் - பேட்டி 1, செந்தழல் ரவி

·

தொடர் பேட்டியின் முதலில் பதிவர் செந்தழல் ரவியின் பேட்டி வெளியாகிறது. தொடர்ந்து சிலரது பேட்டிகளும், எஞ்சிய பாகங்களும் வலையேற்றப் படும். இப்பேட்டிக்கு மட்டும் அனானி ஆப்சன் நீக்கப் படுகிறது.

உரிமைத்துறப்பு:தனிமனிதரை ஆபாசமாக தாக்குகிற, தனிமனிதர்களின் சுற்றத்தை அல்லது சம்பத்தப்பட்ட வேறு எவரையுமோ தாக்குகிற பின்னூட்டங்கள் நிச்சயம் அனுமதிக்கப்படா. ஆபாசம் தவிர்த்து வேறு கருத்துக்களும் அப்பின்னூட்டங்களில் இருப்பின் அவை மட்டுறுத்தி வெளியிடப்படும் என்பதற்கு உத்திரவாதம் இல்லை. இப்பதிவரை தாக்கியோ பாராட்டியோ வரும் பின்னூட்டங்களுக்கு அனுமதி இல்லை.


மூர்த்தியுடன் உங்கள் நட்பு முறிந்தபோது அவன் எவ்வாறு பதிவுகளில் எழுதிவந்தான்? ஆபாசங்களை தொடங்கியிருந்தானா? இல்லையா?

ஆபாச சைபர் கிரிமினல் மூர்த்தியுடன் 'நட்பு' என்ற சொல் அருவருப்பை தருகிறது. நான் பதிவுலகின் உள்ளே நுழைந்தபோதே மூர்த்தி ஆபாசங்களை தொடங்கியிருந்தான். டோண்டு பதிவுக்கு பின்னூட்டினால், ஆபாச அர்ச்சனைகள் பின்ன்னூட்டமாக வரும். டோண்டு அவர்கள் ஒவ்வொரு பதிவாக சென்று, தன்னுடைய கண்டுபிடிப்பான எலிக்குட்டி சோதனை பற்றி விளக்கிக்கொண்டிருப்பார். என்னுடைய இரண்டாவது பதிவில் http://tvpravi.blogspot.com/2006/04/blog-post_17.html பின்னூட்டம் இட்ட ஒரே ஆளும் அவர்தான். போலி டோண்டு இவரா அவரா என்று என்னுடைய சம காலத்தில் பதிவுலகுக்கு வந்த லக்கிலுக்கும் நானும் அரட்டையில் விவாதித்துக்கொண்டிருப்போம். அதற்கு அடுத்த வாரத்தில் Doondu என்ற நபர் தான் போலி என்று கண்டுகொண்டேன். சாதாரனமான பின்னூட்டங்கள் வரும் http://tvpravi.blogspot.com/2006/04/blog-post_26.html (இதில் Doondu வை நான் போலி என்றே விளித்து எழுதியுள்ளதை பார்க்கலாம்) மற்றும்
http://tvpravi.blogspot.com/2006/04/blog-post_25.html போன்ற பதிவுகளை பாருங்கள். இதே நேரத்தில், போலி டோண்டு தளத்தில் இருந்து வரும் பின்னூட்டங்களின் மூலம், டோண்டு என்பவர், ஆண் பெண் கற்புநிலை பற்றி கேவலமாக எழுதுவதாகவும், சாதி வேறுபாட்டை மருபடி கொண்டுவர முயல்வதாகவும், இதனை தாங்கள் ஒரு குழு அமைத்து எதிர்த்து வருவதாகவும் அறிவித்தனர். டோண்டு பதிவில் பின்னூட்டம் எதுவும் போடவேண்டாம் என்றும் கேட்டுக்கொண்டது அந்த பின்னூட்டங்கள். போலி டோண்டு யார் என்று கண்டுபிடிக்க ஆவல் இருந்ததால், டோண்டு பதிவில் பின்னூட்டங்கள் எதுவும் போடாமல் அமைதி காத்தேன். அதனால் என்னுடைய மின்னஞ்சலும், அவர்களுடைய லிஸ்டில் சேர்ந்தது. இது தான் நீங்கள் சொல்லும் தொடர்பு. மற்றபடி நடவடிக்கைகளை அறிய முயன்று, டோண்டுவை எதிர்ப்பது போன்று ஒன்றிரண்டு மின்னஞ்சல்களும் என்னுடைய முகவரியில் இருந்து அனுப்பியுள்ளேன்.

2. நட்பு முறிய உடனடிக் காரணம் என்ன?

சென்ற கேள்வியின் நீட்சியாக இதற்கு பதில் அளிக்கலாம். இந்த நேரத்தில் நான் பார்ப்பணீய எதிர்ப்பு, வெங்காயம், பெரியார், கடவுள் நம்பிக்கை துறப்பு, இந்துத்துவ எதிர்ப்பு என்று கொஞ்சம் ட்ரான்ஸ்பார்ம் ஆகியிருந்தேன்.

ஜெயராமனை கேள்வி எழுப்பி பதிவு http://tvpravi.blogspot.com/2006/06/blog-post_22.html, இந்த பதிவில் ஜெயராமன் சொல்லியிருப்பது உண்மையான உண்மைகளே. என்னுடைய புரிதல் தவறு என்று பின்னால் உணர்ந்தேன்.

டெலிமார்க்கெட்டிங் அலுவலகத்தில் வேலை செய்யும் பெண்கள் எல்லாம் விபச்சாரிகள் என்று கும்மியடித்த டோண்டு மற்றும் ம்யூஸை நோக்கி http://tvpravi.blogspot.com/2006/08/blog-post_19.html , இந்த பதிவின் பின்னூட்டத்தில் கும்மிகளும் ஆரம்பம்.

விடாது கருப்பு என்பவர் சதீஷ் என்று நம்பி http://tvpravi.blogspot.com/2006/07/blog-post_28.html அவரது விடாப்பிடியான தேவையில்லாத பார்ப்பன எதிர்ப்பை சாடும் விதத்தில். இதில் விடாது கருப்பு மூர்த்தியின் பின்னூட்டத்தில், பார்ப்பன ஜாதியை தாழ்ந்த சாதி என்று எழுதியதை பார்த்தவுடன், விடாது கருப்புவின் உண்மையான நோக்கத்தில் சந்தேகம் வந்தது. அவனுக்கும் மூர்த்திக்கும் தொடர்பு இருக்கும் என்று உறுதியாக நம்ப ஆரம்பித்தேன்.

இருந்தாலும், அவ்வப்போது வரும் பார்வேர்டு பின்னூட்டங்களை படிப்பது, மற்றும் போலி யார் என்று ஷார்ட் லிஸ்ட் செய்ய முயல்வது, வேலைவாய்ப்பு கல்வி வலையிதழ் என்ற முயற்சி, மகாலட்சுமி என்ற பெண்ணுக்கு கல்விக்கு உதவிய முயற்சி, திடீரென ஒரு கட்டத்தில் சலிப்படைந்து, ஓடிப்போறேன்யா பதிவுலகத்தில் இருந்து என்று ஒரு பதிவு போட்டுவிட்டு அப்புறம் அமைதி, பிறகு ஆடுன காலும் பாடுன வாயும் சும்மா இராது என்பதுபோல மீண்டும் மொக்கைகள்.

எல்லோரும் அய்யோ அம்மா என்று புலம்பும் ஆபாச அர்ச்சனைகள் எனக்கு வருவதில்லை, காரணம் டோண்டு பதிவில் பொதுவாக நான் பின்னூட்டம் போடுவதில்லை. ஒருவகையில் பயம், ஒருவகையில் ஏன் தேவையில்லாத பிரச்சினை என்ற எண்ணம், ஒருவகையில், போலியார் சாதி ஒழிப்பு விடுதலை இயக்கத்தால் கட்டமைக்கப்பட்ட டோண்டு என்ற கிழட்டுப்பார்ப்பன சாதிவெறி மிருகம் எக்கேடோ கெட்டுப்போவுது என்ற அலட்சியம். இருந்தாலும் டோண்டு ஏதாவது தவிர்க்கமுடியாத வகையில் பதிவை போட்டுவிடுவார், அதில் பின்னூட்டம் போட்டே ஆகவேண்டிய கட்டாயத்தில் பின்னூட்டம் போட்டோம் என்றாலும், அதற்கும் இரண்டொரு ஆபாச அர்ச்சனைகள் வரும். வேலைப்பளுவும், வெவ்வேறு திசைகளில் பயணிக்கவேண்டிய கட்டாயங்களும் அதனை தொடர்ந்து பாலோ செய்யவிடாமல் தடுத்தன.

இதன்பின் விடாது கருப்புவுக்கு எதிராக விட்டது சிகப்புவும், மூர்த்தியின் இன்னொரு தளமான ஸ்பெஷல் ஆப்புவும், மூர்த்தியின் போலி தளமான கரு.மூர்த்தி என்ற தளமும், டூண்டு தளத்தின் தினம் ஒரு ஆபாச அர்ச்சனைகளும் ஆரம்பமாயின. வஜ்ரா சங்கர், என்றென்றும் அன்புடன் பாலா, அன்னியன் ரமணி, முகமூடி, திருமலை, காசி என்று போலி மூர்த்தியை கருத்தளவில் எதிர்த்தவர்கள் அத்துனைபேருக்கும் போலி தளங்கள், டோண்டு பதிவில் பின்னூட்டம் போட்டதால் கே எஸ் அதியமானுக்கு போலி தளம், அரவிந்தன் நீலகண்டனுக்கு போலி தளம் என்று டாப் கியர் எடுத்திருந்தது போலி பிரச்சினை.

ராபின்ஹூட் ஒரு படி மேலே போய், மூர்த்தியின் திருமண போட்டோவை இணையத்தில் வெளியிட்டு, போலி டோண்டு என்பது மூர்த்தி தான் என்பதை ஆதாரங்களுடன் அம்பலப்படுத்தினார். ராபின்ஹூட் மகேஷ், நீங்கள் ஏற்கனவே அவர் பெயரை ஒரு பதிவில் குறிப்பிட்டுவிட்டதாக நியாபகம், பெங்களூரில் இருப்பதால், அது அருண் ஆக இருக்ககூடும் என்று மூர்த்தி சந்தேகப்பட்டு, அதனை கண்டுபிடிக்கும் அசைன்மெண்டை எனக்கு அனுப்பியிருந்தான். நான் பெரிதாக கண்டுகொள்ளவில்லை. ஆகவே என்னையும் அவனது சந்தேக வட்டத்தினுள் கொண்டுவந்திருந்தான்.

இந்த குறிப்பிட்ட பதிவை நான் இட்டது தான் நானும் இந்த சுழலில் சிக்க காரணம். http://tvpravi.blogspot.com/2007/04/blog-post_03.html இந்த பதிவில் தொடர்ச்சியாக ஆபாச தாக்குதல்களுக்கு உள்ளானேன். அவை பொதுவாக வருவன போல் அல்லாமல் என்னுடைய மிக அதீதமான தனிப்பட்ட தகவல்களோடு இருந்ததை பார்த்துவிட்டு அதிர்ந்துவிட்டேன். இந்த நேரத்தில் மூர்த்தி என்பவர் தான் போலி டோண்டு என்றும், கோவி கண்ணன் அவர் நன்பர் என்றும் அறிந்துகொண்டேன். கோவி கண்ணனும், தன்னுடைய சட்னிவடை என்ற பதிவை பற்றி சொல்லியிருந்தார், அதிலும் ஆபாச தாக்குதல்கள் ஆரம்பித்திருந்தன. என்னுடைய இந்த பதிவில் ஆபாச அர்ச்சனை செய்தது போலி டோண்டு மூர்த்தி தான் என்று கோவியாரிடம் சொல்ல, இல்லை என்று அவர் சாதித்தார். அதற்குள் போலி டோண்டுவை தொலைபேசியில் அழைத்து ஒரு பிரபல பதிவர் வாங்கு வாங்கு என்று வாங்கியிருந்தார். அது நான் தான் என்றும் அவனது சந்தேகம். என்னுடைய நம்பரை வாங்கி போலி டோண்டு மூர்த்தியிடம் கோவி கண்ணன் அளித்தார். மேலும் என்னுடைய ஸ்டேட் கவுண்டர் பார்வேர்டை போலி கேட்கிறான், அதனை கொடுத்துவிட்டால் பிரச்சினையை முடித்துக்கொள்ளலாம் என்று சொன்னதால் அதனையும் கோவியாரிடம் கொடுத்தேன்.

கிட்டத்தட்ட பெண்குரலில் ஒரு அழைப்பு வந்தது, அதில் தான் தான் போலியார் என்றும், என்னுடைய பதிவில் ஆபாச பின்னூட்டங்களிட்டது பார்ப்பணர்களின் வேலை என்றும், உன்னுடைய ஸ்டேட் கவுண்டரில் என்னுடைய ஐபி இல்லை, அதாவது அதற்குள் கோவியார் அதனை போலி மூர்த்தியிடம் பாஸ் செய்திருந்தார், ஆகவே தமிழ் இணைய பிதாவான தன்னிடம் ஜாக்கிரதையாக நடந்துகொள்ளவேண்டும் என்ரு எச்சரித்தார் போலியார். கொஞ்சம் கூட ஆண்மையற்ற அந்த குரல் போலியுடையதாக இருக்காது என்று நினைத்திருந்தேன். ஏன் என்றால் போலிக்கு கொடுக்கப்பட்டிருந்த பில்டப் அப்படி.

அதன்பின் டோண்டுவுக்கு ஒரு பின்னூட்டம் இட, ஆட்டோமெட்டிக்காக உருவானது என்னுடைய போலி வலைப்பதிவும், http://tvpravi.blogspot.com/2007/07/blog-post.html போலி பின்னூட்டங்களும்.

இவன் தான் போலி என்று தெரிந்துவிட்டதால்

மலேசியா மனநோயாளி என்று எழுதி நான் போட்ட பதிவு http://tvpravi.blogspot.com/2007/07/blog-post_02.html
ரீட் நோட்டிபை மூலம் அனுப்பிய மின் அஞ்சல் ஒன்றை விடாது கருப்புவும், டூண்டுவும் ஓரே ஐபியில் இருந்து திறந்ததால் விடாது செருப்பு என்று எழுதி நான் போட்ட பதிவு http://tvpravi.blogspot.com/2007/07/blog-post_8094.html
அப்போது போலியார் என்றெல்லாம் எழுதி லக்கிலுக் பதிவு எழுதியதால் லக்கிலுக் மீதும் டென்ஷன், இணையத்தில் சைக்கோக்களின் ஆதிக்கம் http://tvpravi.blogspot.com/2007/07/blog-post_6734.html, பின்னால் லக்கிலுக் பதிவு நீக்கப்பட்டது. அதன்பிறகு லக்கிலுக்கையும் க்ளோஸாக வாட்ச் செய்து, அவர் மீது எந்த தவறும் இல்லை என்று கண்டுகொண்டதால் மட்டுமே அவருடன் நட்பை தொடர்ந்தேன்.

டோண்டு ராகவன் ஒரு பதிவில் சொன்னது போல ப்ரவுணி புள்ளிகளுக்காக லக்கிலுக் போலி டோண்டு மூர்த்தியுடன் இணைந்தாரா, அதன் பின் மூர்த்தியால் ப்ளாக் மெயில் செய்யப்பட்டாரா என்பது எல்லாம் எனக்கு தெரியாது.

3. 'அதனை கண்டுபிடிக்கும் அசைன்மெண்டை எனக்கு அனுப்பியிருந்தான்' என்று கூறுகிறீர்கள். எப்படி அனுப்பினான்? மடலிலா. அரட்டையிலா அல்லது தொலைபேசியிலா? அந்த அசைன்மேன்டின் உள்ளடக்கம் என்ன? அவன் ஏன் உங்களுக்கு அனுப்பி இருந்தான்?

அரட்டையில் இல்லை. மடலில்.

4. 'என்னுடைய ஸ்டேட் கவுண்டர் பார்வேர்டை போலி கேட்கிறான், அதனை கொடுத்துவிட்டால் பிரச்சினையை முடித்துக்கொள்ளலாம் என்று சொன்னதால் அதனையும் கோவியாரிடம் கொடுத்தேன்.' என்று கூறுவதில் உள்ள முரணை விளக்குங்கள்? யாரென்றே தெரியாத நபரிடம், அதுவும் ஆபாசங்களை செய்துவரும் நபருக்கு எவ்வாறு பாஸ்வேர்டை தந்தீர்கள்? இது உலகில் எவருமே செய்யத்துணியாத ஒன்று அல்லவா? மேலும் உங்கள் ஸ்டேட் கவுண்டர் பாஸ்வேர்டை வைத்து போலி என்ன செய்தான்?

இது என்ன ஸ்விஸ் வங்கி பாஸ்வேர்டா யாருமே செய்யத்துணியாத என்று பில்டப் எல்லாம் ? அதுவும் எனக்கு நன்கு பழக்கமான கோவியார் கேட்கிறாரே என்று கொடுத்தேன். அவன் அதை வைத்து என்ன செய்தான் என்று தெரியது.

போலியின் குணாதிசியம் பற்றி உங்கள் தெரிந்தவை என்ன?


கேள்விக்கு கேள்வி சைக்கோ என்ற வார்த்தைக்கு என்ன குணாதிசியங்கள் அகராதியில் உள்ளன ?


அவனது தொடர்பில் நீங்கள் பதிவுகள் எழுதியுள்ளீர்களா? ஆம் என்றால் எத்தனை? அவை எம்மாதிரியானவை?

விடாது கருப்பு யார் என்று கண்டறியவேண்டு என்ற ஆவலில் இமெயில் தொடர்பை ஏற்படுத்தி, அந்த சமயத்தில் என்னுடைய நன்பர் ஒருவர் சொன்ன ஒரு கருத்தாக்கத்தை பதிவாக்கினேன். வோல்கா நதியில் இருந்து வந்த அறிவாளிகள் ரஷ்யர்கள், சுகோய் விமானத்தை அந்தரத்திலேயே பல்டி அடிக்கவைக்கும் அவர்கள் தான் பார்பனர்கள் என்று எழுதினேன். அதன் பின் வேறு எந்த பதிவும் எழுதவில்லை. ஆனால் பிரச்சினையில் நானும் விடாது கருப்புவின் ஒரு ஆசிரியர் என்று காட்ட போலி டோண்டு முனைந்தபோது இதனையும் பயன்படுத்தினான்.

இந்த இடத்தில் முக்கியமான ஒன்றை விளக்கவேண்டும். முகமூடி ஒரு பின்னூட்டத்தில் சொல்லியிருப்பார். போலி டோண்டுவின் அல்லக்கை நீ என்று நான் நம்பவில்லை. ஆனால் போலி டோண்டுவை கண்டுபிடிக்கவேண்டும் என்பதற்காக நீ சென்ற தூரம் அருவருப்பானது என்று. என் மனதில் எப்போதும் அரித்துக்கொண்டிருப்பது இது. போலி டோண்டு முயன்று நிறுவியது போல டோண்டு சாரின் மனைவி மகள் படத்தை நான் போலி டோண்டுவுக்கு அளிக்கவில்லை. போலி டோண்டு தளத்தில் எந்த ஆபாச பதிவும் எழுதவில்லை. யாருக்கும் எந்த ஆபாச பின்னூட்டமும் போடவில்லை.

போலி டோண்டு எபிசோடுக்கு முன்பே அல்லது இடையிலோ, எதிர் கருத்து சொல்பவர்களை கொஞ்சம் அரகண்ட் ஆக எதிர்கொண்டது உண்மை. ஆனால் ஆபாச பதிவு எழுதவோ, ஆபாச பின்னூட்டம் போடவோ என்னுடைய மனது ஒப்புக்கொள்ளாது என்பதை முகமூடிக்கு தெளிவுபடுத்த ஆசை.

போலி நடத்திய குழுமத்தில் பிறரது மடல் முகவரியை அவர்கள் அறியாமலேயே இணைக்க பொறிவைப்பது போன்ற மின்மடல்கள் பலருக்கும் வந்தன. அம்மடலில் இருக்கும் கார்பன் காப்பி முகவரிகளில் doondu@gmail.com -யும் இருக்கும். அம்மடல்களுக்கு 'ரிப்ளை ஆல்' கொடுக்கும்போது அது போலிக்கும் சென்று, பிறகு அவர்களும் அவன் நடத்தும் குழுமத்தில் உறுப்பினர்போல் இணைக்கப்படுவர். உங்களுக்கும் இதுபோன்ற மடல்கள் வந்ததா?

உண்மை. இருபத்தைந்து மின்னஞ்சல்களில் நடுவில் டூண்டு என்ற ஐடியும் தொக்கி நிற்கும், ஆனால் அதன் டிஸ்ப்ளே பெயர் டோண்டு என்று இருக்கும். ஆக ஒரு ஓவர் லுக் செய்துவிட்டு ரிப்ளை செய்தீர்கள் என்றால் நீங்கள் டூண்டுவுக்கு மின்னஞ்சல் செய்வது போன்றே தோற்றப்பாட்டுடன் ஸ்க்ரீன்ஷாட் எடுக்கமுடியும்.

இதில் எனக்கு ஒரு ஆச்சர்யம் பாருங்கள்.

போலி டோண்டுவை நான் பொது தளத்தில் எதிர்க்க ஆரப்பித்த பின், என்னுடைய நிறுவனம் தாய் நிறுவனத்துடன் இணைக்கப்பட்டது. என்னுடைய மின் அஞ்சல் ravindran.antonysamy@lgsonfindia.com என்பதில் இருந்து ravindran@lge.com என்று மாறிவிட்டது.

திடீரென ஒருநாள் லக்கிலுக் போன் செய்து, உங்கள் மின்னஞ்சல் ஸ்க்ரீன்ஷாட்டை போட்டிருக்கிறான் பாருங்கள் போலி. நீங்கள் அப்படி மின்னஞ்சல் அனுப்பினீர்களா என்று கேட்டான். டூண்டு தளத்தை திறந்து பார்த்த எனக்கு அதிர்ச்சி. அப்படியே ravindran.antonysamy@lgsonfindia.com என்ற மின்னஞ்சலில் இருந்து டூண்டு ஜிமெயிலுக்கு மின் அஞ்சல் போன மாதிரி ஒரு ஸ்க்ரீன்ஷாட். அதில் ஜிமெயிலில் வரும் ஐக்கான்கள் உட்பட பர்பெக்டாக இருந்தது கண்டு அதிர்ந்தேன். இது ஒரு எடுத்துக்காட்டு.

ravindran.antonysamy@lgsoftindia.com என்ற முகவரியில் இருந்து அவ்விதமான மடல் ஒன்று சிலருக்கு சென்றுள்ளது. அதில்doondu@gmail.com என்ற போலியின் முகவரியும் cc -யில் இருந்தது. இது பற்றிய உங்கள் விளக்கம் என்ன?

வேறு ஒருவர் மின்னஞ்சலை போல உருவாக்கி அனுப்பும் அளவுக்கு அவனுக்கு தொழில்நுட்ப அறிவு உண்டு.



ஆபாசமாக எழுதியது, உங்களை தாக்கியது, பதிவுலகின் மீது அக்கறை இவற்றில் எது மூர்த்திக்கு தண்டனை வாங்கித் தரவேண்டும் என்ற என்னத்தை உங்களுக்கு ஏற்படுத்தியது?

என்னைப்பொறுத்தவரை, மிகுந்த சுயநலத்தோடு, என்னை தாக்கியமைக்கு முதலில் அவனுக்கு தண்டனை தரவேண்டும் என்று நினைத்தேன். ஏன் என்றால், அவனது ஒவ்வொரு ஆபாச தாக்குதல் வார்த்தைகளும் இரண்டு நாளைக்கு உள்ளத்தை விட்டு அகலாமல் தொண்டையில் சிக்கிய மீன் முள் போல உறுத்திக்கொண்டிருக்கும். மற்ற இரண்டுக்கும் பதில் அளிக்கவிருப்பமில்லை.

5. ஆபாசமாக எழுதியது மூர்த்தி மட்டுமல்ல என்கிறபோது வேறு எவர்மீதேல்லாம் புகார் அளித்துள்ளீர்கள்? வேறு யாரும் அவ்வாறு அளித்துள்ளார்களா? ஆம் எனில் அவற்றின் தற்போதைய நிலவரம் என்ன?

மூர்த்தியின் எல்லை மீறிய செயல் புகார் அளிக்க காரணம். பெங்களூர் தமிழர்களுக்கு பிரச்சனையான ஒரு நேரத்தில், என்னுடையது போல ஆர்க்குட் முகவரி ஒன்றை உருவாக்கி, அதில் என்னுடைய தொலைபேசி எண்ணையும் இட்டு, அதன் மூலமாக கன்னட சலுவளி சங்கங்கள், கன்னட வலைப்பதிவர் கூட்டமைப்புகள், கன்னடத்தை தாய்மொழியாக கொண்ட ஆர்க்குட்டர்களுக்கு, கன்னடன் எல்லாம் முட்டாள்கள், தமிழன் ஒவ்வொருவனும் ஒரு கன்னடனை கொல்லவேண்டும் என்கிற ரீதியில் நூற்றுக்கனக்கான இடங்களில் எழுதினான்.

அப்படி எழுதும்போது, என்னுடைய கன்னடத்தை தாய்மொழியாக கொண்ட என் மனைவியும் இது போன்ற குழுமங்களில் உறுப்பினர் என்பதால் என்னுடைய கவனத்துக்கு உடனே வர, நாங்கள் இதனை பெங்களூர் காவல் அதிகாரிகளிடம் கொண்டு சென்று, அதன் பிறகு அவர்களுடைய அறிவுரையின் பேரில் சென்னை காவல் நிலையம் வந்து புகார் தந்தோம்.

மூர்த்தி மீது மட்டும்தான் புகார் அளித்தோம். பாதிக்கப்பட்ட உண்மைத்தமிழனும், டோண்டுவும் இதில் இணைந்துகொண்டார்கள். உண்மைத்தமிழன் அண்ணனை முதலில் சந்தித்து, புகாரை தட்டச்சினோம். வழக்குரைஞர் மக்கள் சட்டம் சுந்தர்ராஜனை சந்தித்தி அவருடைய சட்ட ரீதியான ஆதரவையும் பெற்றேன்.

6. போலியால் ஆபாசத் தாக்குதலுக்கு உள்ளானது தவிர்த்து வேறு பல வழிகளிலும் தொல்லைக்குல்லானதாக தெரிவித்துள்ளீர்கள். அவை எவ்விதமானவை?

முந்தைய பதில் இதற்கும் பொருந்தும். திருமதி துளசி கோபாலிடம் மின்னஞ்சல் அனுப்பி டோண்டு மனைவி மகள் படத்தை பெற்று ஆபாச பதிவு எழுதியதாகவும், போலி டோண்டுவோடு தொடர்பில் இருந்ததாக போலி மின்னஞ்சல் ஸ்க்ரீன் ஷாட்கள் மூலமும், விடாது கருப்பு தளத்தில் நான் ஆசிரியர் என்பது போன்ற கட்டமைக்கப்பட்ட பிம்பமும், வலைப்பதிவின் மூலம் நான் ஆண்டுகணக்கில் பெற்ற நன்மதிப்பை தூள்தூளக்க போதுமானதாக இருந்தது. திருமதி துளசியும், நான் மதிக்கும் வாத்தியார் அய்யாவும், சிவஞானம் ஜியும், காசி சாரும் என்னை பற்றி என்ன நினைப்பார்கள், அவர்களுக்கு எப்படி உண்மைகளை புரியவைப்பது என்று குழம்பியே பெரும் மன உளைச்சல் அடைந்தேன். மேலும் நான்கு மாத கர்ப்பிணியான மனைவியுடன் சென்னைக்கு சென்று புகார் தரவேண்டிய அலைச்சலுக்கும் உள்ளானதால் தனிப்பட்ட அளவிலும் பாதிக்கப்பட்டேன். மேலும் என்னுடைய அலுவலகத்துக்கு தொலைபேசியில் அழைத்து, மனித வள அதிகாரிகளிடம் மூர்த்தி சொன்னது என்ன தெரியுமா ? ரவி என்பவர் அலுவலக நேரத்தில் இணையத்தில் பார்ப்பணர்களை தாக்கி எழுதுகிறார் என்பது. இதனால் அவர்கள் என் மீது வைத்திருந்த நன்மதிப்பும் உடைந்து தூளானது.

8. பார்பநீயப் பதிவர்களால் மிகுதியாக வெறுக்கப்படும் நீங்கள் டோண்டுவுடன் எவ்வாறு நெருங்கிநீர்கள் என்று கூற முடியுமா? 'ஊசி ஏற்றுவதுபோல்' உங்களை தாக்கிய பதிவர்கள் அல்லது பதிவுகள் எவை?

இணையத்தில் பார்ப்பணீயப்பதிவர்கள் என்று நான் யாரையும் கருதவில்லை. அரவிந்தன் நீலகண்டன், ஜெயராமன், ஜடாயு, ம்யூஸ் இந்துத்துவம் எழுதுவார்கள். அதில் உள்ள சில கருத்துக்களை எதிர்த்துள்ளேன், அவர்களும் என்னை பதிவு போட்டு குமுறியுள்ளார்கள். பொதுவாக முகமூடி எழுதும் நான்கு வரியில் நாற்பது உள்குத்துகள் இருக்கும். ஒருமுறை ஒரு இந்துத்துவ பதிவில் 'ரவீந்திரன் அந்தோனிசாமி' என்று என்னுடைய முழு பெயரை எழுதியதன் மூலம், நீ கிறிஸ்தவ மதம், அதனால் கருத்து சொல்ல வந்துவிட்டாயா என்பது போல கேட்டார். என்ன தான் நான் எந்த மதத்தையும் பின்பற்றவில்லை என்று தலைபாடாக சொன்னாலும், இந்துத்துவ பதிவர்கள் என்னை மதத்தை வைத்து தாக்குவதை வாடிக்கையாகவே வைத்துள்ளார்கள். ஒருமுறை முத்து தமிழினி சொன்னார். முகமூடி குத்துவார். ஆனால் வலிக்காது. கொஞ்ச நேரம் கழித்து வலிக்கும் என்று. அதுபோல.

'முகமூடி குத்துவார். ஆனால் வலிக்காது. கொஞ்ச நேரம் கழித்து வலிக்கும் என்று' உதாரணம் தந்து விளக்க முடியுமா?

இந்த இடத்தில் தேவை இல்லாதது இது. ஏற்கனவே சொல்லிவிட்டேன்.


டோண்டு பற்றி சாதரணமாக பலருக்கும் அப்போது தெரிந்திருந்த நிலையில் உங்களுக்கு தெரிந்தது என்ன?

மற்றவர்களுக்கு தெரிந்தது தான் எனக்கும். ஆனால், அவருக்கு தெரிந்த சில தனிப்பட்ட தகவல்கள் போலி டோண்டுவிடம் சென்றுவிடும். நான் ஒருமுறை பெங்களூர் கே ஆர் புரம் பிக் பஸாரில் இருந்தேன். அப்போது டோண்டுவிடம் இருந்து தொலைபேசி அழைப்பு. என்னுடைய மனைவி ஜெர்மன் படிக்கவேண்டும் என்பதை பற்றி விசாரிக்க நான் அனுப்பிய மின்னஞ்சலுக்கு அழைத்திருந்தார். அப்போது என்னுடைய மனைவி என்ன சமூகத்தை சேர்ந்தவர் என்பதை கேட்டார். சொன்னேன். அடுத்த இரண்டு நாட்களில் என்னுடைய மனைவியின் சமூகத்தை சொல்லி திட்டி போலி டோண்டுவிடம் இருந்து மின்னஞ்சல் வந்திருந்தது.

பதிவுலகில் போலிடோண்டு தொடர்பாக நடக்கும் ஒவ்வொரு சச்சரவுகளின் போதும் கோவிகன்ணனை நீங்கள் தாக்கிவந்துள்ளீர்கள். அவரும் எதிபதிவுகள் இட்டுள்ளார். மூர்த்தியுடனான முந்தய பழக்கங்களில் நீங்கள் இருவரும் எவ்விதம் மாறுபடுகிறீர்கள் என்று கூறமுடியுமா?

மூர்த்தி தான் போலி டோண்டு என்று ஆயிரம் முறை நிரூபித்த பின்னும், மூர்த்தி என்னுடைய நன்பர், அவர் போலியா என்று தெரியாது. என்னுடைய குடும்பத்தை அசிங்கமாக எழுதிய விடாது கருப்பை பார்த்து தன்னுடைய பெரியார் பற்றிய அறிவை வளர்த்தேன் என்றெல்லாம் சொன்னால், கோபம் வருமா வராதா ?

11. tbcd உடன் உங்களுக்கு அல்லது உங்களுடன் அவருக்கு என்ன பிரச்சினை? இருவரும் இது தொடர்பாக பதிவிட்டுள்ள போதிலும் பிரச்சினை தொடங்கியதன் உடனடிக் காரணம் என்ன?

குரங்கு கோவிகண்ணன் என்றால் அதன் வாலான டிபிசிடியும் என்னுடைய எரிச்சல்ஸ் ஆப் இண்டியா லிஸ்டில் இருப்பாரா மாட்டாரா ?

TBCD கோவியின் நண்பராக மட்டுமே அவர் இருந்தாரா? போலியுடன் அவருக்கு தொடர்பு இருந்தது என்ற தகவல்கள் இதுவரை எங்கும் கிடைக்கவில்லை. நீங்களும் கூறவில்லை. போலியை உளவு பார்க்கும் பொருட்டாகாக் கூட அவர் தொடர்பில் இருக்கவில்லை (இது தகவல் பிழை என்றால் விளக்க வேண்டுகிறேன்!!) போலி விசயத்தில் நீங்கள் சென்ற தூரத்தைக் கூட அவர் செல்லாத நிலையில் (சென்றிருந்தால் விளக்கவும்) அவரை ஏன் பதிவுகளில் மோசமாக தாக்கினீர்கள்?

நானும் சொல்லியிருக்கிறேன், அவரும் தன்னுடைய பதிவிலேயே சுட்டி கொடுத்தவர். அவர் எந்த தூரத்துக்கு சென்றார் என்பதை அவரே விளக்குவார். அவரை பதிவில் மோசமாக தாக்கியதாக நினைக்கவில்லை. ஆபாச தாக்குதலுக்கு உள்ளான, (இது உண்மையில் உங்களுக்கு நடந்திருதால் அதன் உண்மையான வலி தெரியும்) என்னுடைய உணர்வை புரிந்துகொள்ளாதவர். இதுவரை விடாது கருப்புவோ போலியோ தவறு செய்ததாக ஒத்துக்கொள்ளாதவர். அதனை எதித்து ஒரு கண்டன பதிவும் போடாதவர். இதற்கு மேல் சொல்ல ஒன்றுமில்லை.

நீங்கள் பகிரங்கமாக குற்றம் சாட்டும் சிலரிடமிருந்து லக்கிலுக் எவ்வாறு மாறுபடுகிறார்? மாறுபாடுகள் ஏதும் இல்லை என்று அறியமுடிவதில் உங்களது இருவேறு அணுகுமுறைகள் புரியவில்லையே?

விவகாரம் ஆபாசமாக தொடங்கியதில் இருந்தே நானும் லக்கிலுக்கும் தொடர்ந்து தொலைபேசி தொடர்பில் உள்ளோம். காவல்துறையில் புகார் கொடுக்க சென்றபோது அவரும் கமிஷனர் அறைக்கு வந்தார். லக்கிலுக் பற்றிய ஒரு சில ஆதாரங்களை எடுத்து வைத்துள்ளார்கள். ஆதாரங்களை தருபவர்கள் காவல்துறையிடம் செல்லட்டுமே ? ஏன் அவ்வாறு செய்யவில்லை ? பெங்களூர் அருணுக்கும் அவருக்கும் ஏற்கனவே கருத்து மோதல் இருக்கிறது. மேலே சொல்ல எதுவுமில்லை.

போலி குழுவாக அல்லது அவ்வாறு சொல்லிக்கொண்டு இயங்கிய காலத்தில் ஏதேனும் புதிய தகவல்கள் அவனுக்கு கிடைத்தால் 'எங்களது பெங்களூர் / சென்னை கிளை திரட்டிய தகவல்கள்' என்று குறிப்பிடுவான். அது பற்றி உங்களுக்கு தெரியுமா? சென்னை கிளை என்றால் யார்?

எனக்கு தெரியாது. ஒரு வேளை டோண்டு சாரை கேளுங்களேன் ?


சல்மா அயூப் விவகாரம் குறித்தும் புகாரளிக்க பாதிக்கப்பட்டவர் மறுத்துவிட்ட நிலையிலும் உண்மைத்தமிழன் இதுபற்றியும் புகாரளிக்க வேண்டும் என்று எப்போதாவது கூறியிருந்தாரா? ஆம் எனில் அக்கோரிக்கை நிராகரிக்கப்பட்டதா?

தெரியாது.

14. காவல்துறையில் புகார் அளித்தபின் அதற்காக அலைந்தவர்கள் யாவர்? போலிடோண்டு முடக்கப்பட்டதில் டோண்டுவின் பங்கு என்ன?

உண்மைத்தமிழன். உண்மைத்தமிழன் மட்டுமே. நான் வெளிநாடு செல்லும் வேலை இருந்ததால், ஏராளமான டாக்குமெண்டேஷன்களை கொண்ட எங்கள் புகார்களை பிரித்து வைத்து நடத்துகிறார்கள். சமரசமாக போகும்படி எவ்வளவோ கேட்டும் உண்மை அண்ணன் விட்டுக்கொடுக்கவில்லை. இந்த விடயத்தில் உண்மைத்தமிழன் போலிக்கு ஒரு நைட்மேர் என்றால் அது மிகையில்லை. டோண்டுவும் உண்மைத்தமிழனுக்கும் முழு அளவில் சப்போர்ட் செய்துள்ளார். இது குறித்து நீங்கள் கேட்கவேண்டியது உண்மை அண்ணனை மட்டுமே.

15. இந்திய சைபர் கிரைம் சட்டம் மற்றும் காவல் துறை முற்றிலும் வலிவானதில்லை என்றாலும் நீங்கள் பல இடங்களில் குறிப்பிட்டுள்ள தனிநபர் தாக்குதல் தொடர்பான சட்டம் குறித்த எச்சரிக்கைகளை இங்கு வரிசைப் படுத்த முடியுமா?

என்னுடைய போலி வலைப்பதிவு tvbravi, கவனிக்க, உண்மையான வலைப்பதிவு tvpravi. இதனை சென்னை சைபர் க்ரைம் நிறுவனத்திடம் கொடுத்துவிட்டு வந்த மறுநாள், செய்தி தாள்களில் வந்த செய்திகளை பார்த்துவிட்டு, பயந்த மூர்த்தி அதனை அழித்தான்.

மதிய உணவுக்கு முன் அதனை ஒரு முறை பரிசோதித்த எனக்கு அதிர்ச்சி. என்னுடைய போலி வலைப்பதிவு அழிக்கப்பட்டிருந்தது. புதிதாக உருவாக்கவா என்று கேட்டது கூகிள். சரி என்று வேறு யாரும் உருவாக்கிவிடக்கூடாது என்ற பயத்தில் tvbravi என்ற பெயரிலும் நானே பதிந்துகொண்டேன். அடுத்த மூன்று மணி நேரத்தில் சென்னை சைபர் க்ரைம் காவல் துறை உதவி ஆய்வாளர் அழைத்தார். என்ன மிஸ்டர் ரவி, கூகிள் நிறுவனம் சொல்கிறது உங்கள் வலைப்பதிவை உருவாக்கியது LG நிறுவத்தில் Node 148 என்று ? உங்கள் சிஸ்டம் அட்மின் துறை அது உங்கள் கணினி என்று சொல்கிறார்களே என்று. பிறகு அவரிடம் உண்மையை விளக்கினேன்.

ஆகவே சைபர் க்ரைம் சட்டம் பற்றி நான் சொல்வது இதுதான். தப்பித்துவிடலாம் என்று நினைக்காதீர்கள். கூகிள் நிறுவனமும் யாஹூ நிறுவனமும், ஸ்கைப்பும், மற்ற ப்ராக்ஸி தளங்களும் 48 மணி நேரத்தில் தமிழக சைபர் க்ரைம் பிரிவுக்கு தகவல்களை தந்துவிடுகிறார்கள். உங்கள் அனானி பின்னூட்டம் கூட உங்களை காட்டிக்கொடுத்துவிடும். வல்லவனுக்கு வல்லவன் வையகத்தில் உண்டு.

16. போலிடோண்டு விவகாரத்தில் எல்லோரும் கற்கவேண்டிய பாடம் என்ன?

உப்பு தின்றவன் தண்ணீர் குடித்தேயாகவேண்டும்.

நண்பர் ரவி, உங்கள் பதில்களை வலையேற்றிவிட்டு உங்களிடம் ஒருமுறை காட்டிய பிறகே திரட்டிகளில் இணைப்பேன் என்று உறுதிகூருகிறேன். எவ்வித தணிக்கையும் இன்றி வெளியிடுகிறேன். நீங்கள் எப்போது கூறினாலும் உங்கள் பதில்களில் திருத்தம் செய்வேன் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

[தொடரும்]

0 comments: