Sunday, September 13, 2009

போலி டோண்டு விவகாரம் - ஒரு தகவற்கோவை

·

கடந்த சிலநாட்களாக தமிழ் வலையுலகை அல்லோகலப் படுத்திவரும் போலி டோண்டு விவகாரம் பதிவர்கள் மத்தியில் மட்டுமல்லாது வாசகர்கள் மத்தியிலும் சில எண்ணங்களை ஏற்படுத்தியுள்ளது. ஏமாற்றம், அவமானம், பதற்றம், பயம், நிம்மதி, அங்கலாய்ப்பு, அருவருப்பு என சில உணர்வுகளை உருவாக்கியுள்ளது. ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கிய இந்த விவகாரம் காவல் துறை சம்பந்தப்பட்ட ஒன்றாகிப் போனபின் பல போலித்தளங்கள் அழிக்கப்பட்டுவிட்டன. வலைப்பூக்களும் புதிய பதிவர்களால் நிரம்பி ஆரோக்கிய பாதைக்குத் திரும்பிக் கொண்டிருக்கிறது. எனினும் அவ்வப்போது புதிய பதிவர்களுக்கு எச்சரிக்கை செய்யும் விதத்தில் சிலராலும், வேண்டுமென்ற பிரச்சினையை கிளர வேண்டும் எண்ணத்தில் சிலராலும் இப்பிரச்சினை தூண்டப்பட்டு வருகிறது. ஓராண்டுக்குமுன் பதிவர் இளா -வால் இவ்வாறு ஒருமுறை தூண்டப்பட்டது. தற்போது சிறில் அலெக்ஸ் எழுதிய பதிவால் புதிய பதிவர்களுக்கு அவ்விவகாரம் பற்றி அறியும் ஆவல் ஏற்பட்டுள்ளது.

பெரும்பாலும் இவ்விவகாரம் குறித்து, இதில் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ சம்பத்தப் பட்டவர்கள் தவிர்த்து ஏனையோர் கருதுவது 'இது தற்போது தேவையற்ற பிரச்சினை' என்பதாகும். ஆனால் அக்கருத்து இப்பிரச்சினை குறித்து முழுமையாக அறியாமலோ அல்லது எதுவுமே தெரியாமலோ இவர்களுக்கு ஏற்பட்டிருக்கக் கூடும். ஆகவே இதுகுறித்து இவ்வலைப்பூவில் முடிந்தவரை ஆதியோடந்தமாக விளக்க, இத்தொடர் பதிவும், வரவிருக்கும் பேட்டிகளும் முயற்சி செய்கின்றன.

உரிமைத்துறப்பு: தனிமனிதரை ஆபாசமாக தாக்குகிற, தனிமனிதர்களின் சுற்றத்தை அல்லது சம்பத்தப்பட்ட வேறு எவரையுமோ தாக்குகிற பின்னூட்டங்கள் நிச்சயம் அனுமதிக்கப்படா. ஆபாசம் தவிர்த்து வேறு கருத்துக்களும் அப்பின்னூட்டங்களில் இருப்பின் அவை மட்டுறுத்தி வெளியிடப்படும் என்பதற்கு உத்திரவாதம் இல்லை. இப்பதிவரை தாக்கியோ பாராட்டியோ வரும் பின்னூட்டங்களுக்கு அனுமதி இல்லை.


இந்த கதை 2004ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 18ஆம் தேதி தொடங்கி இன்றுவரை நடந்து கொண்டிருக்கிறது. டோண்டு உட்பட பலரது தளங்களில் இதுபற்றிய செய்திகள் இருந்தாலும் அனைத்தும் சார்புக்கதைகளே. ஒரு முழுமையான விசாரணையை பலரிடம் மேற்கொண்டதின் அடிப்படையில் இப்பதிவு எழுதப்படுகிறது.

18-11-2004 அன்று நேசமுடன் வெங்கடேஷ் என்பவரால் எழுதப்பட்ட கமலகாசன் பற்றிய பதிவு (http://www.tamiloviam.com/nesamudan/page.asp?ID=110&fldrID=1) ஒன்று இவ் விவகாரத்தின் தொடக்கப்புள்ளி. அப்பதிவில் கமலகாசனை சிலாகிக்கும் ஆசிரியர் அவரது குறிப்பிட்ட இரு பலங்கள் வேறு எவரிடமும் இல்லாதவை என்றும் அவருக்கு அடுத்து அரவிந்தசாமி, மாதவன் ஆகியோரிடம் அவற்றை எதிர்பார்ப்பதாகவும் கூறியிருந்தார்.

///கமலுக்குப் பின் நான் இருவரை அதுபோன்ற ரிஸ்க் எடுப்பார்கள் என்று எதிர்பார்த்தேன். ஒருவர் அரவிந்தசாமி. அவருக்கும் கமலைப் போலவே பேசும் முகம், கண்கள். கமலைவிட ஸ்மார்ட்டாய், வெள்ளைவெளேர் என்று வேறு இருந்தார்./////

////மற்றொருவர், மாதவன். இவரும் பாப்புலர் ஹீரோவின் அத்தனை அம்சங்களும் ஒருங்கே பெற்றவர். /////பாப்புலர் ஹீரோ பிம்பத்தில் இருந்து சட்டென ஒரு கேரக்டர் ஹிரோ உயரத்துக்கு இவர் போகவேண்டும். அதற்கான அத்தனை வளங்களும் அவரிடம் இருப்பதாகவே நான் நினைக்கிறேன். ////

பதிவர் ஒரு பிராமணர் என்பதை பின்னூட்டங்களில் அறிய முடிகிறது. பிராமணல்லாதோரை விட பிராமணருக்கு கூடுதல் தகுதிகள் உள்ளன என்பதுபோன்று இணையத்திலும் இதழ்களிலும் எழுதப்பட்ட பதிவுகளும், கட்டுரைகளும் எண்ணற்றவை இருந்தாலும் இப்பதிவுதான் போலித்தளங்கள் விவகாரத்திற்கு ஆணிவேர். அப்பதிவில் 'வழிப்போக்கன்' என்ற பெயரில் பின்னூட்டமிட்டவர்தான் விசாரனைக்குள்ளான பதிவர் மூர்த்தி என்று கருதப்படுகிறது. முப்பதுக்கும் மேற்பட்ட அவரது பின்னூட்டங்களில் அவர் அனைத்துவித கண்ணியத்தையும் கடைபிடித்திருக்கிறார். சூத்திரனை சோற்றுக்கு போய் மாடு மேய்க்கச் சொல்லும் ஒரு பின்னூட்டத்திற்கும் பொறுமையாகவே பதில் அளிக்கிறார். ஆனால் அவரது கடைசி பின்னூட்டத்திற்கு பிறகு வந்த அனானிமஸ் பின்னூட்டங்கள் அவரை மூர்க்கமாகவும் ஆபாசமாகவும் தாக்கியுள்ளன.

இன்று புனிதராக தனக்கு தானே பட்டம் கட்டி கொண்டிருக்கும் டோண்டு ஒரிஜினல் பெயரிலும், அனானிமஸ் மற்றும் முரளிமனோகர் பாணியில் வேறு வேறு பெயர்களிலும் தனிப்பட்ட முறையில் தாக்கியிருப்பதை காணலாம். குறிப்பாக 'கமல் ரசிகன்' என்ற பெயரில் வந்த பின்னூட்டம் மிக மோசமானது. வழிப்போக்கனாக அங்கு கண்ணியமாக வாதிட்டது மூர்த்தி தானா என்பதை உறுதிகூட செய்யாமல், அது மூர்த்தியே தான் என்று முத்திரை குத்தி மாற்றி மாற்றி அடுத்தடுத்து அவரவர் வலைப்பதிவில் கும்மியிருக்கிறார்கள் பிராமண பிரியர்கள். சம்பந்தபட்ட சுட்டிகள் இப்போது கிடைக்குமா என்று தெரியவில்லை, பலரும் பதிவுகளை அழித்துவிட்டார்கள். அவை கிடைத்தால் இன்றைய புனித பிம்பங்கள் அப்போது எவ்வளவு புனிதமாக செயல்பட்டிருக்கிறார்கள் என்று தெரிந்து கொள்ளலாம். அடுத்தடுத்து தன் மீது குத்தப்பட்ட ஆபாச முத்திரை மூர்த்தியை மூர்க்கம் கொள்ள செய்தது. இவ்வாறு உருவாக்கப்பட்ட போலியின் பொதுவான செயல்பாடு எதுவாக இருந்தது? டோண்டுவின் பதிவில் யாரும் பின்னூட்டம் இடக்கூடாது என்று பகிரங்கமாக மிரட்டப்பட்டார்கள். மீறி பின்னூட்டம் இட்டவர்களின் பதிவுகளுக்கு ஆபாச பின்னூட்டங்கள் வரும். இந்த பின்னூட்டங்களையும் டோண்டு பெயரிலேயே போட்டதால் மூர்த்திக்கு போலி டோண்டு என்று பெயர் சூட்டப்பட்டது. பலரும் இந்த சாக்கடையில் கல்லெறிய தயங்கி ஒதுங்கி நின்றார்கள்.

பிரச்சினையை தொடக்கத்திலேயே முடித்திருக்க டோண்டுவால் முடிந்திருக்கக் கூடும். போலிடோண்டுவின் எதிர்வினை ஆபாச பதிவுகளை நிறுத்துவது தொடர்பாக டோண்டு ஆதரவாளர்களும் அதை நிறுத்தி விட்டு தனிப்பட்ட முறையில் பேசி தீர்த்திருக்கலாம். வேறு சிலர் அவ்வாறு பிரச்சினையை முடித்திருக்கின்றனர். ஆனால் டோண்டுவால் பிரச்சினை பெரிதானது. பிரச்சினையில் ஒதுங்கி நின்றவர்கள் சிலரை பற்றிய தகவல்கள் டோண்டுவால் போலிடோண்டுவுக்கு போனதாக கூறப்படுகிறது. இதற்கு உதாரணமாக டி.பி.ஆர் ஜோசப், சிவஞானம்ஜி ஆகிய மூத்த பதிவர்களை சொல்லலாம். இவர்களை பற்றி போலியிடம் டோண்டுவே போட்டு கொடுத்தது உறுதிப் படுத்தப்பட்டுள்ளது. இது தவிர, டோண்டு பின்னூட்டமிடும் அப்பாவி பதிவர்கள் டோண்டுவுக்கு பதில் பின்னூட்டமிடும்போது அவர்கள் போலி டோண்டுவால் தாக்கப்பட்டார்கள். இதற்கிடையே, டோண்டுவுக்கும் போலி டோண்டுவுக்கும் இடையில் ஆபாச சேட்டிங் பலமுறை நடந்துள்ளன. பதிவர் சந்திப்பு ஒன்றில் ‘மூர்த்தி தேவடியா மகன் போனில் திட்டினான்’ என்று டோண்டு சொன்னதை சந்திப்பில் கலந்துகொண்ட, இவ்விஷயத்தில் சம்பந்தப்படாத பதிவர்கள் மூலம் அறியப்படுகிறது.

போலியும் டோண்டுவும் ஒருவருக்கொருவர் ஆபாசமாக மாய்ந்துக் கொள்ளும்போது ஒதுங்கி நின்றவர்கள் பயந்தான்கொள்ளிகளாக கருதப்பட்டனர். பலர் பதிவெழுதுவதை நிறுத்தினர். போலியை போலி பாணியிலேயே தொடர்ந்து தாக்கி வந்த பலருக்கு டோண்டுவிடம் இருந்து என்ன பட்டம் கிடைத்தது என்று தெரியவில்லை. ஆனால் சிலர் போலியின் அல்லக்கைகளாக பெயர்சூட்டப்பட்டனர். போலியுடன் தம் தொடர்பை மறுத்த அல்லது துண்டித்துக்கொண்ட பலரும் அப்பெயரை பெற்றுக்கொண்டனர். அப்பெயர் பெற்றவர்களில் சிலர் பிறகு போலியிடம் தமக்கேற்பட்ட மனக்கசப்புகளால் தம் ஆதரவை டோண்டுவுக்கு வழங்கத் தொடங்கினர். இதன் பிறகு ஆபாசமாகத் தாக்கிக் கொண்டவர்கள் மற்றும் அமைதியாக இருந்தவர்கள் என்று இருந்த இரு பிரிவு மாட்டிக்கொண்டவர்கள், மாட்டிவிடுபவர்கள் என்று மாறிப்போனது.

இந்நிலையில் தமக்கு ஆதரவு திரட்ட டோண்டு செய்த சில நடவடிக்கைகள் எதிர்விளைவுகளை ஏற்படுத்தின. சென்னையில் பதிவர் சந்திப்பு என்று அறிவிப்பார். ஏழெட்டு பேர் விபரம் தெரியாமல் உட்லண்ட்ஸ் டிரைவ் இன்னில் கூடுவார்கள். போண்டா சாப்பிடுவார்கள். அன்று மாலையே பதிவர் சந்திப்பு பதிவு ஒன்றை டோண்டு போடுவார். சந்திப்பில் போலியை ஒழிப்பது எப்படி என்று பேசியதாக எழுதுவார். இது போதாதா? சந்திப்பில் கலந்து கொண்டவர்கள் அனைவர் பெயரிலும் போலி தளம் ஆரம்பித்து விடுவான் போலி டோண்டு. இவ்வாறாக டோண்டு – போலி டோண்டு என்ற இரு நபருக்கும் மட்டுமே இருந்த பிரச்சினையை மிக கவனமாக போலி டோண்டு – தமிழ் பதிவர்கள் என்று வளர்த்தெடுக்க டோண்டு பிரயத்தனப்பட்டார். 2005, 2006 மற்றும் 2007 ஆகிய மூன்றாண்டுகளில் போலி டோண்டு தமிழ் வலைப்பூக்களில் கடுமையான வெறியாட்டம் ஆடி வந்திருக்கிறான். சகட்டுமேனிக்கு கண்ணில் கண்ட எல்லோரையுமே ஆபாசமாக அர்ச்சித்து மன உளைச்சலை கொடுத்து வந்திருக்கிறான்.

எப்படி இருந்தாலும் போலியை உருவாக்கியவர் என்ற முறையிலும், போலி டோண்டு தற்போது வலைப்பூக்களை விட்டு விலகி விட்டதாலும் டோண்டுவே அப்போது இருந்த ஆபாசசூழலுக்கு பொறுப்பேற்க வேண்டியவர் ஆகிறார்.

0 comments: